Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே

Deal Score0
Deal Score0

பல்லவி

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம்

சரணங்கள்

1. அன்னை மரி சுதனை – புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம்

2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்

3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி – தோத்திரம்

https://www.worldtamilchristians.com/sthothiram-seyvaenae-ratchakanai-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo