Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல
பல்லவி
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி
2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி
3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் – துதி
4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் – துதி
5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் – துதி
6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் – துதி