
Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics
Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதைய்யா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதைய்யா
மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமோ
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமோ
பால் என்பேன் தேன் என்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
முதலென்பேன் முடிவென்பேன்
மூன்றில் ஒரு வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன்