Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

Deal Score0
Deal Score0

1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்
பூமியிற் பிறந்தார் பாலகனாய்!
நீச மா பாவியைக் கருணையாய்
தேடிவந்தார் – வந்தார்!

பல்லவி

தேடிவந்தார் – வந்தார்;
தேடிவந்தார் – வந்தார்;
நீச மா பாவியைக் கருணையாய்,
தேடிவந்தார் – வந்தார்

2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;
தீவினை போக்கவும் பாடுபட்டார்,
இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?
உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி

3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்
புத்தியில்லாமலே அலையுங்கால்
நீசனை நினைத்து நேசித்ததால்
இரட்சை செய்தார் – செய்தார் – தேடி

4. இயேசு என் மீட்பர் வந்தருளுவார்;
வானத்தினின்றவர் இறங்குவார்!
மாட்சிமையோ டென்னைச் சேர்த்துக்
கொள்வார் வாழச் செய்வார் – செய்வார் – தேடி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo