Zionae paathai Seer- சீயோனே பாதை சீர்
1. சீயோனே பாதை சீர் செய்
உயர் மா ஆழியே;
மாமலைகாள் நீர் தாழ்வீர்,
மா மகிபன் காண்பீர்;
மா மறை சாற்றும் மீட்பர்
மாண் நீதி மாட்சி வேந்தர்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!
2. திறந்திடு உன் வாசல்
சிறந்த வேந்தர்க்கு
மண் மாந்தர் யார்க்கும் மீட்பாம்
விண் செய்தி தந்தனர்
இருளை விட்டே மீள்வார்
அருளை வாழ்த்தி ஆர்ப்பார்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!
3. போர்ச் சேனை யுத்த சூழ்ச்சி
பாராய் அவருடன்
ஆனால் பிசாசின் ஆட்சி
காணாதே மாய்ந்திடும்
சிலுவைச் சாவால் தாக்கி
வல் பேயை வெல்வார் வேந்தர்
கர்த்தாவின் நாமத்தில்
வந்தோர் நீர் வாழ்கவே!