அடிங்கட மேளம் – Adingada Melam
Lyrics:
அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)
எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத
ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே
கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு
வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே
அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு