அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics
அண்ணே! அண்ணே!
அண் ஆ! என்ன தம்பி
தம்பி இந்த மானிடர் அன்பு
அண் அது முருங்கை கொம்பு
1. தம்பி இளநீள வானமும் இலைதரும் பசுமையும்
இயேசுவின் அன்பினைக்காட்டுதண்ணே
பாடுகின்ற பறவையும் பறக்கும் குருவியும்
இயேசுவின் அன்பினைப் பாடுதண்ணே
அண் நன்றிகெட்ட மனிதனை நம்பாதே தம்பி
நம்புவதற்கு அவன் எம்மாத்திரம்
மனிதன் சந்தர்ப்ப வாதியன்றோ (2)
– தம்பி அண்ணே! அண்ணே!
2. தம்பி நம்பி நீயும் பழகுகின்ற நல்லதொரு
உறவுக்குதான்
நட்பு என்று நீயும் சொல்வாயண்ணே
நானிலத்தில் நண்பன் என்று
சொல்லுகின்ற எத்தனையோ
நன்றி கெட்டு போனது தெரியாதாண்ணே
அண் சுவாசமுள்ள மனிதம் மாறிடுவானே
வஞ்சித்து நம்மை ஏமாற்றுவானே
மாறிடா உண்மை நண்பர் உண்டு அவர் தான்
இயேசு அவரை நம்பு
மனிதன் சந்தர்ப்ப வாதியன்றோ (2)
– தம்பி அண்ணே! அண்ணே!
3. தம்பி அன்றொநாள் சிலுவையிலே
கல்வாரி மலையிலே
ஜீவனைத் தியாகமாய் கொடுத்ததற்கும்
அன்னைத் தந்தை இருவரும் நம்மீதுகாட்டுகின்ற
அன்பிற்கும் வித்தியாசம் என் அண்ணே
அண் ஐயிரண்டு திங்கள் சுமந்தவள் மறப்பாள்
அறிவூட்டும் தந்தை ஒரு நாளில் வெறுப்பார்
உன் மேல் உண்மை அன்பு கொண்டு
உனக்காய் சிலுவையில் மரித்தார் அன்று
தம்பி இது தான் உண்மை அன்பா அண்ணே
இத்தனை காலமும் மறந்தேன் நானே
தம்பி அண்ணே! அண்ணே!
அண் ஆ! என்ன தம்பி
தம்பி இந்த மானிடர் அன்பு
அண் அது முருங்கைக் கொம்பு
தம்பி நம் இயேசுவின் அன்பு
அண் அது பரிசுத்த அன்பு! அது மாறிடா அன்பு
அது நித்திய அன்பு! அது தான் உண்மை அன்பு