அதிசயங்களைச் செய்யும் – Athisayangalai seiyum Aandavar
பல்லவி
அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை
ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே.
அனுபல்லவி
இரக்கம் கிருபை சத்தியம் விளங்க
இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். – அதி
சரணங்கள்
1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி
நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்
பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்
புரிந்தனை நின் அருள் பூரணமாக; – அதி
2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்
பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,
கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்
கிருபாகரனைப் போற்றிடுவீரே. – அதி
3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்
ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.
ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி
நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். – அதி
4. பரமபிதாவே பரிசுத்த தேவா,
பாரினில் உதித்த தேவ குமாரா,
ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்
ஆரண திரித்துவா, துதி உமக்கே. – அதி