அதிசயமானவரே என் அன்பு இயேசுவே – Athisiyamaanavare En Anbu Yesuvae

Deal Score0
Deal Score0

அதிசயமானவரே என் அன்பு இயேசுவே – Athisiyamaanavare En Anbu Yesuvae

அதிசயமானவரே என் அன்பு இயேசுவே
ஒரு வார்த்தை சொன்னதுமே
குருடர் முடவர் நடக்கின்றாரே-2
அதிசயமானவரே…

1.வானமும் பூமியும் படைத்தீரையா
உம் வார்த்தையாலே அவை உருவாயிற்று-2
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
அதனால் வானம் பூமி வந்தது-2-அதிசய

2.கடலை பார்த்து சொன்னீரையா
இரையாதே அமைதலாயிரு
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
அதனால் காற்றும் நின்றது-2-அதிசய

3.மரித்த லாசரை கண்டீரையா
லாசருவே எழுந்து வா என்று-2
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
லாசருக்கு ஜீவன் வந்தது-2-அதிசய

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo