அநாதி ஸ்நேகம்- Aanadhi sneham
அநாதி ஸ்நேகம் – (3)
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்
பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)
1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி
2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி