அநேகர் ஆசை கொள்ளும் – Anegar Aasai Kollum

Deal Score0
Deal Score0

அநேகர் ஆசை கொள்ளும் – Anegar Aasai Kollum

1.அநேகர் ஆசை கொள்ளும்
பொருளை வாஞ்சியேன்,
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப் பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம், என் செல்வம்
என் ஆஸ்தி க்றிஸ்துவே,
என் பாக்கியம், பேரின்பம்
எல்லாம் என் மீட்பரே.

2.என் யேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;
எனக்கு ஜீவனாக
ஜெயித்தெழும்பினார்.

3.இவ்வண்ணம் என்னை மீட்டு
ஆட்கொண்ட யேசுவே,
நான் உம்மையே புகழ்ந்து
துதித்தல் ஞாயமே;
பூரிப்படைந்தோனாக
நான் போற்றத் தேவரீர்
என் நெஞ்சத்தை அன்பாக
எழுப்பக் கடவீர்.

Anegar Aasai Kollum song lyrics in English

1.Anegar Aasai Kollum
Porulai Vaanjiyean
Karthaavin Vaarthai Sollum
Mei porul Naaduvean
En Pokkisam En Selvam
An Aasthi Kiristhuvae
En Bakkiyam Pearinbam
Ellaam En Meetparae

2.En yesuvai Naan Pattri
Thodarvean Avalaai
En Saabaththai Agattri
Ratchiththaar Neasamaai
Naan Thappa Enkkaga
Tham Raththam Sinthinaar
Enakku Jeevanaaga
Jeyithelumbinaar

3.Evvannam Ennai Meettu
Aatkonda Yesuvae
Naan Ummaiyae Pugalnthu
Thuthithal Gnayamae
Poorippadainthonaga
Naan Pottra Devareer
En Nenjathai Anbaga
Eluppa Kadaveer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo