அன்பின் விருந்தருந்த சகோதரர் – Anbin Viruntharuntha Sakotharar

Deal Score0
Deal Score0

அன்பின் விருந்தருந்த சகோதரர் – Anbin Viruntharuntha Sakotharar

பல்லவி

அன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும், வாரும்.

அனுபல்லவி

இன்பமுடன் பூர்வக் கிறிஸ்தவர் ஒன்றித்
திருந் துறவாக விருந்துண்ட வாறு போல்
இணைந்து தக வணிந்து, மிகப்
பணிந்து மறம் தணிந்து தணிந்து -அன்பின்

சரணங்கள்

1.நண்பர்கள் கூட்டத்துக் கிந்த விருந்தொரு
நல்ல அடையாளம் மதியும்;-ஏசு
நாதர், அன்பாய் இரும், என்ற கற்பனையை
நற்கருத்தாய் அகம் பதியும்;-மிகப்
பண்பட யாவரும் கூடிக் குலாவியே
பரமனை இங்குத் துதியும்;-உங்கள்
பழம் பகை யாவும் கட்டிச் சுருட்டி அப்
பாலே எறிந்ததை மிதியும்;
திண் புவியில் யாரும் ஒன்றிப்பதற் கேற்ற
செய்கை அறிந்து புரிவதற்கு வகை
தேடி, அன்பை நாடி, மனம்
கூடி, கீதம் பாடிப் பாடி – அன்பின்

2.உற்ற சிநேக மதற்கு நிகர் சொல்ல
ஒன்றும் இல்லை, அதை ‘ஒரும்; – அதால்
ஊதியமான சந்தோட சிலாக்கியம்
ஒக்க இணைந் தங்கு சேரும்;-அன்பு
பெற்ற சகோதரர் ஒன்றித்து வாழ்வது
பெருத்த மாட்சிமை பாரும்;- அதைப்
பேணி உறாத சத் ராதிகட்கு வெகு
“பீடைகளே வந்து சாரும்;
கற்றறிந்து வேதக் கற்பனை மீறாமல்,
கர்த்தருக் கேற்க நடந்து பொறாமையைக்
களைந்து, கற்பில் விளைந்து, அன்பில்
தளைந்து, தம்மில் குழைந்து குழைந்து,

Anbin Viruntharuntha Sakotharar song lyrics in english

Anbin Viruntharuntha Sakotharar Anaivarum Vaarum

Inbamudan Poorva Kiristhavar Pntri
Thirnthuravaga Virunthunda vaaru Poal
Inainthu Thaga Vaninthu Miga
paninthu Maram Thaninthu Thaninthu

1.Nanbargal Koottathukku Intha Vieunrhoru
Nalla Adaiyalam Mathiyum Yesu
naathar Anbaai Irum Entra Karpanaiyai
narkaruthaai Agam Pathiyum Miga
Panpada Yaavarum Koodi Kulaviyae
Paramanai Ingu Thuthiyum Ungal
Pazham Pagai Yaavum Katti Surutti
Appalae Erinthathai Mithiyum
Thin Puviyil Yaarum Ontripathar Keattra
Seigai Arinthu Purivatharkku Vagai
Theadi Anbai naadi Manam
Koodi Geetham Paadi Paadi

2.yuttra Sineaga Matharkku Nigar Solla
Ontrul Illai Athai Orum Athaal
Ookkathiyamaana Santhoda Silakkiyam
Okka Inaintangu Searum Anbu
Pettra Sakotharar Ontrithu Vaalvathu
Perutha Maatchimai Paarum Athai
Peanai urathaa Sath rathikatku Vegu
Peedaigalae Vanthu saarum
Kattrarinthu Vedha Karpanai Meeramal
Kartharukku Kearkka Nadanthu Poramaiyai
Kalainthu Karpil Vilainthu Anbil
Thalainthu Thammil Kulainthu Kulainthu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
christian Medias
Logo