அன்பிற்கு இலக்கணம் யாரோ – Anbirku Ilakanam Yaaro lyrics
பல்லவி
அன்பிற்கு இலக்கணம் யாரோ
இயேசு அவர் இயேசு
அன்பிற்கு அடையாளம் ஏதோ
சிலுவை அது சிலுவை
அனுபல்லவி
அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
சரணங்கள்
1. நண்பரை சிநேகிப்பது நட்பு – ஆனால்
பகைவரை நேசிப்பதோ அன்பு
2. நல்லோரை நேசிப்பது மரபு – ஆனால்
பொல்லாரை நேசிப்பதோ அன்பு
3. வலியோரை மதிப்பது இயல்பு – ஆனால்
எளியோரை நேசிப்பது அன்பு
4. தேவ பகைஞானம் என்னை – இயேசு
சிலுவையில் நேசித்ததோ அன்பு