அன்பு இயேசுவின் அன்பு – Anbu Yesuvin Anbu Lyrics
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிட முடியாதது – நம்பு
இதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது
சரணங்கள்
1. தாய் தந்தை அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும்
நல்ல பிள்ளைகள் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்
என்றென்றும் மாறாதது என் இயேசுவின்
தூய அன்பு
என் வாழ்வில் தீராதது என் தேவனின்
ஜீவ அன்பு
2. நண்பனின் அன்பொரு நாள் – அது
நலிந்தே போய்விடும்
நீ நம்பினோர் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – என்றென்றும்
3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும்
நல்ல மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும் – என்றென்றும்
4. தேசத்தின் அன்பொருநாள் – அது
தேய்ந்தே போய்விடும்
நல்ல பாசத்தின் அன்பொருநாள் – அது
பறந்தே போய்விடும் – என்றென்றும்
5. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும்
உடன் பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும் – என்றென்றும்