அன்பு பாலகா அருமை – Anbu Paalaga Arumai Song Lyrics

Deal Score0
Deal Score0

அன்பு பாலகா அருமை – Anbu Paalaga Arumai Song Lyrics

அன்பு பாலகா அருமை இரட்சகா ஆரிராரிரோ
தாவீதின் மைந்தனே தவக்குமாரனே தாலலேலேலோ

பாவியை மீட்க பூமிக்கு வந்த பாலனே கண்ணுறங்கு
தாவியே வந்து ஏகமாய் பார்க்கும் நேசனே கண்ணுறங்கு
மரியின் மைந்தனே மனுக்குமாரனே
மன்னரும் அஞ்சவே மின்னலாய் வந்த மீட்பரே கண்ணுறங்கு

வான தூதரும் வாழ்த்திப் பாடிட வள்ளலே கண்ணுறங்கு
ஞானவான்களும் பரிசளித்தனர் ஞானமே கண்ணுறங்கு
மந்தை மேய்ப்பர்கள் மகிழ்ந்து பாடவே
கந்தை பொதிந்து நிந்தை நீக்கியே நிமலனே உறங்கு

ஏழ்மை கோலத்தை ஏந்தி நின்ற ஏந்தலே கண்ணுறங்கு
தாழ்மை பண்பை தரணிக்குத்தந்த தெய்வமே கண்ணுறங்கு
விண்ணில் மகிமையே மண்ணில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் வைத்த மன்னனே கண்ணுறங்கு

Anbu Paalaga Arumai Song Lyrics in English

Anbu Paalaga Arumai
Ratchaka Aariraro
Thaveethin Mainthanae
Thavakumaaranae Thaalaelalo

1.Paaviyai Meetka Boomikku
Vantha Paalanae Kannurangu
Thaaviyae Vanthu
Yeahgamaai Paarkkum
Neasanae Kannurangu
Mariyin Mainthanae
Manukumaaranae
Mannarum Anjavae
Minnalaai Vantha
Meetparae Kannurangu

2.Vaana Thootharum
Vaazhththi Paadida
Vallalae Meetparae Kannurangu
Gnanavaankalum Parisliththanar
Gnanamae Meetparae Kannurangu
Manthai Meippargal
Magilnthu Paadavae
Kanthai Potinthu
Ninthay Neekkiyae
Nimalae Kannurangu

3.Yealimai Koalaththai
Yeanthi Nintra Yeanthalae Kannurangu
Thaazhmai Panbai
Tharanikku thantha
Deivamae Kannurangu
Vinnil Magimaiyae
Mannil Samaathaname
Manushar Mael Piriyam
Vaitha Mannanae
Kannurangu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo