அன்பே என்றென்னை நீர்- ANBAE ENTENNAI NEER song lyrics
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்-2
நான் தனிமை என்றெண்ணும்போது
தாங்கி கொண்டீரே
தயவால் அணைத்துக்கொண்டீரே
நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே
1.என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே-2
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2
என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே
2 நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே-2
நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2
என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே