
அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye
அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye
அழகோவியமே, எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே..
உன் பார்வை சொல்லும் கருணையும்
பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே,
கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே,
கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே,
ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே, தாயே
உம்மை நம்பி வந்தோம். இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் ,
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது ..உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தை சொல்லும் போது….. நெஞ்சம்
இனிக்குதே… அழகோவியமே
ஆதாரம் நீயே என்று, அண்டி வருவோருக்கெல்லாம்
ஆதரவு தருபவளே, அன்னை தாய் மாமரியே
அம்மா உன் காட்சியெல்லாம் ஏழைகளின் பாக்கியமே
என்னாலும் இவர்களுக்கு, உதவிடும் உன்திருகரமே
கண்ணின் மணியை போலே.. என்னை காத்திடும் தெய்வத்
தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள்
உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை என் தாயே…
இனி இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் முன்னாடி
புதிய உலகம் படைப்பாய்…. அழகோவியமே
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே