ஆரம்பம் அற்பமே முடிவு – Aarambam Arpamae Mudiuv
ஆரம்பம் அற்பமே முடிவு – Aarambam Arpamae Mudiuv
ஆரம்பம் அற்பமே முடிவு சம்பூர்ணமே – ஆ ஆ ஆ ஆ ஆ
துவக்கம் அற்பமே முடிவு சம்பூர்ணமே – 2
1 – தாவீதோ மேய்ப்பன் தான் முடிவிலே ராஜா தான்
யோசேப்போ அடிமை தான் முடிவிலே அதிபதி தான் – 2
எவரையும் மேன்மையாக்கி பலத்தோடே நிற்கச்செய்ய
உம்மாலே ஆகும் ஆகும் – இயேசைய்யா
உம் கரத்தாலே ஆகும்
உம்மாலே ஆகும் ஆகும் – இயேசைய்யா
உம் ஆவியாலே ஆகும் – ஆரம்பம் அற்பமே
2 – மோசேயோ மேய்ப்பன் தான் முடிவிலே மீட்பன் தான்
யாக்கோபோ பரதேசி தான் முடிவிலே இஸ்ரவேல் தான் – 2
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த ஜாதி
உம்மாலே ஆகும் ஆகும் – இயேசைய்யா
உம் கரத்தாலே ஆகும்
உம்மாலே ஆகும் ஆகும் – இயேசைய்யா
உம் ஆவியாலே ஆகும் – ஆரம்பம் அற்பமே