இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam Lyrics
1. இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் – அவர்
பல்லவி
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்
2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது – அவர்
3. கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
4. உயிரோடிருக்கிற நாமும் நம் தேவனைச் சந்திப்போமே
இந்த நம்பிக்கை வீண்ணல்லவே நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்