இம்மட்டும் என்னை காத்தவரே – Immatum Ennai Kathavarae
இம்மட்டும் என்னை காத்தவரே – Immatum Ennai Kathavarae
இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை நடத்திடுவார் (2)
சோர்ந்திடும் நேரம்,
கிருபைகள் தந்து
அன்பினால் என்னை அணைப்பவரே(2)
என் தேவனால் என்றும்
கூடாதது ஒன்றும் இல்லை(2)
1.கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என் கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
சேர்த்துக் கொண்டவரே
வாழ வைத்தவரே -என் தேவனால்
2.ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் கால்களைப் பெலப்படுத்தி
என் நடைகளை ஸ்திரப்படுத்தி
நிமிர செய்தவரே
உயர்த்தி வைத்தவரே-என் தேவனால்
இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை நடத்திடுவார் (2)
சோர்ந்திடும் நேரம்,
கிருபைகள் தந்து
அன்பினால் என்னை அணைப்பவரே(2)