இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன் – Yesuvin Namathil Ananthipen
இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன் – Yesuvin Namathil Ananthipen
இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
பூவில் மேலான நல் நாமமதில்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
வல்லமை நிறைந்த நாமமிதே
வல்லிருள் நீக்கும் நாமமிதே
வல்லமை நிறைந்த நாமமிதே
வல்லிருள் நீக்கும் நாமமிதே
பாவத்தில் மாண்டிடும் பாவியைத் தேடிடும்
பாசம் நிறைந்த நல் நாமம் இதே
நாமம் இதே
இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
கருணை காட்டும் நாமமிதே
கண்ணீர் துடைக்கும் நாமமிதே
கருணை காட்டும் நாமமிதே
கண்ணீர் துடைக்கும் நாமமிதே
வறுமை வியாதிகள் மரண மோசங்கள்
யாவையும் ஆற்றிடும் நாமம் இதே
நாமம் இதே
இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
ஊற்றுண்ட பரிமள தைலமிதே
கீலியத்தின் பிசின் தைலமிதே
ஊற்றுண்ட பரிமள தைலமிதே
கீலியத்தின் பிசின் தைலமிதே
ஆறுதல் தந்திடும் தேற்றி அணைத்திடும்
அன்பன் இயேசுவின் நல் நாமம் இதே
நாமம் இதே
இயேசுவின் நாமத்தில் ஆனந்திப்பேன்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்
பூவில் மேலான நல் நாமமதில்
ஆனந்திப்பேன் ஆனந்திப்பேன்