இரண்டு நூறு ஆண்டுகள் – Erandu Nooru Aandugal song lyrics
இரண்டு நூறு ஆண்டுகள் – Erandu Nooru Aandugal song lyrics
1.இரண்டு நூறு ஆண்டுகள்
இடைவிடாநல் ஊழியங்கள்
இன்னும் தொடர்ந்திடப் பாடுங்கள்
இறைவன் கிருபை வேண்டுங்கள்
பாடுங்கள், பாடுங்கள்
அன்றுபோல் இன்றும் என்றும்
அவர் கிருபை பெருகி வர
பாடுங்கள், பாடுங்கள்
2.அந்நியர் பலர் ஊழியராய்
இந்நிலம் வந்து மாதிரியாய்
இலங்கினார் உண்மைக் கிறிஸ்தவராய்
இறைவனாம் ஏசுவின் மாண்பிற்காய்
3.இன்னல்கள் வாட்டிய நிலைதனிலும்
இன்முகம் காட்டியே இறைப்பணியைப்
பின்னடையாமல் செய்தோர் முன்னோர்
பின்னோடியாய் நாம் தொடர்ந்திடுவோம்
4. இத்திருமண்டலம் இலங்கிடவே
இயன்ற உதவி செய்வோமென்று
உரத்த குரலில் பாடுங்களேன்
பெருத்த மகிழ்வு தேடுங்களேன்
5.திருமண்டலத்தின் திருப்பணிகள்
திறம்பட இலங்கி முழுமைபெற
தினம் தினம் நீவிர் முழந்தாளிட்டுத்
திரு அவதாரனை வேண்டிடுங்கள்
Erandu Nooru Aandugal song lyrics in english
1.Erandu Nooru Aandugal
Idaividaatha Nal Oozhiyangal
Innum Thodarnthida Paadungal
Iraivan Kirubai Vendungal
Paadungal Paadungal
Antru Poal Intrum Entrum
Avar Kirubai Perugi Vara
Paadungal Paadungal
2.Anniyar Palar Oozhiyaraai
Innilam Vanthu Maathiriyaai
Elanginaar Unmai Kiristhuvaraai
Iraivanaam Yeasuvin Maanpirkkaai
3.Innalgal Vaattiya Nilaithanilum
Inmugam Kaattiyae Iraipaniyai
Pinnadaiyaamal Seithoar Munnor
Pinodiyaai Naam Thodarnthiduvom
4.Iththirumandalam Elangidavae
Eyantra Uthavi Seivomentru
Uraththa Kuralil Paadungalaen
Peruththa Maglivu Theadungalean
5.Thirumandalaththin Thirupanigal
Thirambada Elangi Mulumaipera
Dhinam Dhinam Neever Muzhanthaalittu
Thiru Avathaaranai Veandidungal