உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu
உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2)
நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2)
1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)
பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2)
2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2)
ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2)
3. உன் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக சிறப்பாக இருக்கும் (2)
தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார் (2)