ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை
1.உம்மைப்போல் மழை உண்டாக்க
தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே
மழையைப் பொழியுமோ
நீரல்லவோ நீரல்லவோ –2
2.வயல்களும் ஆறுகளும்
வற்றிப் போயிருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால்
வனாந்திரம் செழிக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2
3.இராஜாவின் முகக்களையில்
ஜீவன் இருக்கும்
உங்க தயவுக்குள்ளே
பின்மாரி இருக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2