எங்கள் மீதிரங்குவீர் ஐயா – Engal Meethiranguveer Aiya

Deal Score0
Deal Score0

எங்கள் மீதிரங்குவீர் ஐயா – Engal Meethiranguveer Aiya

பல்லவி

எங்கள் மீதிரங்குவீர், ஐயா,-இரக்கமுறும்
எந்தையே, திருக்கண் பார், ஐயா.

அனுபல்லவி

துங்க மிகும் ஏகனே, மெய்ச் சோதியுறும் ஏசுநாதா,
‘கங்குல் பகல் துன்பம் மிஞ்சிக் கலங்குகிறோம், ஓலம்! ஐயா -எங்கள்

சரணங்கள்

1.வாந்திபேதி ‘மல்கல் ஆச்சே;-மதிமயங்கி
வாலிபரும் சாகல் ஆச்சே;
மாந்தர் மிசை கோபம் ஆச்சோ?-மகத்வமிகும்
வள்ளலே, உன் அன்பும் போச்சோ?
வேந்தன் மனு வேலே, எங்கள் வேண்டுதலைக் கேட்டுத் தயை
‘போந்தபடி ஈந்தருளும், பூரண நல் ஆதிபனே,

2.ஈசனே, உன் தஞ்சம் அன்றியே-எமக்குப் புகல்
எங்கும் வேறொருவர் இன்றியே,
நீச நரர் மீது நன்றியே-நிதம் அளித்த
நேசம் போயினதோ குன்றியே?
சாசுவத நாயகா, இத் தாரணியில் கொள்ளை நோயும்
வீசும்படி செய்ததாலே விம்முகிறோம், கேளும், ஐயா

3.ஈனர் மன்றாட்டைக் கேள், ஐயா;-இப்போதிரங்கி,
எம்பரா, நோயைத் தீர், ஐயா
மானிடர் முகம் பார், ஐயா,-மகா நிச்சய
வாக்கின்படி கண்பார், ஐயா.
ஞானமுறும், ஏசு தேவா, ஞாலத்தில் வருந்தும் எம்மை
சேர்த்து நிகம் மாட்சியுடன் வாழுதற்காய்,

Engal Meethiranguveer Aiya song lyrics in english

Engal Meethiranguveer Aiya Erakkamurum
Enthaiyae Thirukan Aiya

Thunga Migum Yeagane Mei sothiyurum Yesunaatha
Kangul Pagal Thunbam Minji Kalankukirom Oolam Aiya

1.Vaanthipeathi Malkal Aatche Mathimayangi
Vaalibarum Saahal Aatche
Maanthar Misai Kobam Aatcho Magathvamigum
Vallalae Un Anbum Pocho
Veandhan Manuvealae Engal venduthalai Keatti Thayai
Ponthapadi Eentharulum Poorana Nal Aathibanae

2.Eesanae Un Thanjam Antriyae Emakku Pugal
Engum Veroruvar Intriyae
Neesa Narar Nantriyae Nitham Alitha
Neasam Poyinatho Kuntriye
Saasuvatha Naayaga Eththaaraniyil Kollai Noyum
Veesumpadi Seithathalae Vimmukirom Kealum Aiya

3.Eenar Mantraadai Keal Aiya Eppothirangi
Emparaa Noyai Theer Aiya
Maanidar Mugam Paar Aiya Maha Nitcha
Vaakkin Padi Kanpaar Aiya
Gnanmurum Yesu Deva Gnalaththil Varunthum Emmai
Searnthu Nigam Maatchiyudan Vaalutharkaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo