என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics

Deal Score0
Deal Score0

என் எலும்புகள் தேய்கின்றதே
என் பெலனும் குறைகின்றதே
என் நாட்களும் போகின்றதே
என் காலமும் கரைகின்றதே-2

நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2

1.சிலுவையில் அந்த காட்சி
நொறுங்கியது என் இதயம்
எனை மீட்ட உந்தன் பேரன்பை
சொல்லுவேன் உலகெங்கிலும்-2

சுவிசேஷ பாரம் என்றே நான்
உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2

2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்
பாவி என் நிலை உணர்ந்தேன்
பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட
என்ன தியாகம் நான் செய்வேனோ-2

என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல
இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo