என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2
என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர்
என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்