என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu
என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்-2
என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2
நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்-2
என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2
உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்-2