கண்ணீரின் வழிகள் நனையும் – Kanneerin Vazhigal Nanaiyum song lyrics
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
தீங்கு நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ