கன்னி ஈன்ற செல்வமே – Kanni Yeentra Selvame
கன்னி ஈன்ற செல்வமே – Kanni Yeentra Selvame
ஆ ஆரோ ஆ ஆரோ
ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் தாங்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையேன்
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
வல்ல தேவ வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
ஆராராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
https://www.worldtamilchristians.com/blog/palagan-pirandharae-christmas-song-lyrics/