கர்த்தரின் கை குறுகவில்லை – Kartharin Kai kurugavillai
கர்த்தரின் கை குறுகவில்லை – Kartharin Kai kurugavillai
1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
பல்லவி
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் – விசுவாசியே
3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் – விசுவாசியே
4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் – விசுவாசியே