கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே – Kartharukul Magilthirupathae

Deal Score+1
Deal Score+1

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே – Kartharukul Magilthirupathae

பல்லவி

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே
பக்தர்களின் பெலனே

அனுபல்லவி

இன்பங்கொள்வோம் அன்பர்களே
துன்பங்களின் முன்னே

சரணங்கள்

1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம்
வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம்

2. நாமங்கள் பரலோகத்திலே
எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம்

3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம்
வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம்

4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம்
வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம்

5. தேவ சித்தமதைச் செய்திடுவோம்
தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்

6. குறைகள் யாவும் ஒழித்திடுவார்
நிறைவாய் சந்தோஷம் அளித்திடுவார் – இன்பம்

7. அவமானத்தை ஆனந்தமாய்
தவறாதனுதினம் சகிப்பவராய் – இன்பம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo