கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar
கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2
அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என்
1.தீங்கு நாளில் அவர் என்னை தன்
கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2
என் சத்ருக்கள் வெட்கி நாண
கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2
ஆனந்த பலிதனை செலுத்தியே நான்
கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என்
2.சத்ருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2
என் மாம்சத்தை பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்-2
கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என்
3.தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2
ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2
திட மனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே-2-கர்த்தர் என்
Karthar En Jeevanin Belananavar
Yaarukum Anjidean Enneramum
Avare enthan ozhiyanavar
Ratchipumanavar avaraeyaavaar – 2 -Karthar En
Theengu naalil avar ennai than
koodara maraivil ozhithu vaithar -2
en sathurukal vetki naana
kanmalai meethennai uyarthiduvar -2
Aanantha balithanai seluthiyae naan
Kartharai keerthanam panniduvean – 2 -Karthar En
Sathurukalum pakangkarkalum
pollangu seiya ninaithorkalum
en maamsam patchithida
ennayae nerukkina velayail-2
kartharo en pakkam thunaiyai nintru
kaathennai ratchithaar maa thayavaai – 2 -Karthar En
Thanthai thaayum kaivittalum
Karthar entrum ennai serthukolvaar
jeevanullor desathilae
kartharin nanmaiyai kandadaivean -2
thida manathodu naan kaathirupean
sthirapaduvean avar kirubaiyale – 2 -Karthar En