கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே – Karthar En Meiparai Irukirare
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே – Karthar En Meiparai Irukirare
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சியடையேன் என்றுமே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தின் நிமித்தமவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியுமென்னைத் தேற்றிடுமே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தியொன்று ஆயத்தம் செய்வார்
சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தியொன்று ஆயத்தம் செய்வார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழிய செய்தார்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
ஜீவன் என்னில் உள்ளக் காலம்வரையும்
நன்மை கிருபை எனைத் தொடரும்
ஜீவன் என்னில் உள்ளக் காலம்வரையும்
நன்மை கிருபை எனைத் தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சியடையேன் என்றுமே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே