கர்த்தர் பிள்ளை நீ நித்ரை – Karthar Pillai Nee Nithrai

Deal Score0
Deal Score0

கர்த்தர் பிள்ளை நீ நித்ரை – Karthar Pillai Nee Nithrai

1.கர்த்தர் பிள்ளை! நீ நித்ரை செய்கின்றாய்,
மா நேசர் மார்பில் சுகிப்பாய்;
பேரின்பக் கரை சேர்ந்து களிப்பாய்;
தூங்கு!

2.ஓர் சிசுபோல மிகச் சாந்தமாய்
கேடணுகாமல் துயிலுகின்றாய்,
எப்பாடும் தீங்கும் என்றும் அடையாய்;
தூங்கு!

3.பாவாந்தகாரம் பறந்தோடவும்,
இப்பூவின் மாய்கை தீருமளவும்,
மா சுடரொளி வீசும் வரைக்கும்
தூங்கு!

4.எக்காளச் சத்தம் வானில் கேட்கவும்,
மெய் பக்தர் யாரும் உயிர்த்தெழுவார்,
மா வல்ல தேவன் வருமளவும்
தூங்கு!

5.தெய்வீகச் சாயல் உந்தன் ஆவியில்
மாசணுகாமல் துலங்குகையில்,
பொற் க்ரீடம் சூடி ஆளும் வரையில்
தூங்கு!

6.ஆ! நேசனே! நல்நித்ரை அடைந்தாய்,
மா சொற்பக் காலம் பிரிந்திருப்பாய்,
அப்பாலே யேசுவோடு வருவாய்;
தூங்கு!

7.மா ஜோதி வீசும் வாசஸ்தலத்தில்
மேலோக நாதர் சந்நிதானத்தில்
எல்லோரும் கூடி வாழும் வரையில்
தூங்கு!

Karthar Pillai Nee Nithrai song lyrics in English

1.Karthar Pillai Nee Nithrai Seikintraai
Maa Neasar Maarbil Sugippaai
Pearinba Karai Searnthu Kalippaai
Thoongu

2.Oor Sisu Pola Miga saanthamaai
Keadanugamal Thuyilkintaai
Eppadum Theengum Entrum Adaiyaai
Thoongu

3.Paavaanthakaaram Paranthodavum
Eppoovin Maaigai Theerumalavum
Maa sudaroli Veesum Varaikkum
Thoongu

4.Ekkaala Saththam Vaanil Keatkavum
Mei Bakthar Yaarum Uyirthealuvaar
Maa Valla Devan Varumalavum
Thoongu

5.Deiveega Saayal Unthan Aaviyil
Maasanugamal Thulangukaiyil
Por Kireedam Soodi Aalum Varaiyil
Thoongu

6.Aa Neasanae Nal Nithrai Adainthaai
Maa Sorpa kaalam Pirinthirupaai
Appalae Yeasuvodu Varuvaai
Thoongu

7.Maa Jothi Veesum Vaasasthalaththil
Mealoga Naathar Sannithanaththil
Ellorum Koodi Vaalum vARAIYIL
Thoongu.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo