காலமோ கடைசி காலம் – Kaalamo Kadaisi Kalam

Deal Score+1
Deal Score+1

காலமோ கடைசி காலம் – Kaalamo Kadaisi Kalam

காலமோ கடைசி காலம்
கண் எதிரில் தெரிவதெல்லாம்
கர்த்தன் இயேசு இராஜனையே
தம் எதிரில் அழைத்திடவே – காலமோ

சரணங்கள்

1. யுத்தங்களும் சண்டைகளும்
நித்தம் நித்தம் கண்கள் காண
எந்த நேரம் வந்திடுவார்
சொந்த மக்கள் இன்பம் கொள்வார் – காலமோ

2. பாவங்களில் புரளுகிறார்
கோபங் கொள்வார் கூறிவிட்டால்
நாகரீகமானவர்கள்
நடத்தையில் தரம் இழந்தார் – காலமோ

3. ஊழியர்கள் நடுவினிலே
ஒருமனம் நிலவவில்லை
எல்லாம் பெற்ற உலகமதில்
அன்புமட்டும் காணவில்லை – காலமோ

4. செல்வங்கள் பெருகினாலும்
ஏழைகள் அதிகமானார்
மருத்துவம் சிறந்த போதும்
கொல்லும் நோய்கள் மிகப் பெருக்கம் – காலமோ

5. உலகத்தின் தலைவர் எல்லாம்
சமாதானம் முயற்சித்தாலும்
கலங்கிய மனித உள்ளம்
அலைமோதி தவிக்கின்றது – காலமோ

6. பகலிலோ இரவினிலோ
காலையோ மாலையோ
மகிமையாய் வரப்போகிறார்
ஏற்றுக்கொண்டோர் எழுந்து செல்வார் – காலமோ

7. எந்த எந்த தொழிலாயினும்
தங்கும் இடம் எதுவாயினும்
ஒன்றே ஒன்று எனது வாஞ்சை
வருகையில் மகிழ வேண்டும் – காலமோ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo