கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்
1. கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்
கிருபை வரம் பெற்ற விசுவாசிகள்
ஆவியின் கனிகள் ஒன்பதும் பெற்று
அற்புத இயேசுவை பின்பற்றுவோம்
இயேசுவின் அடிச்சுவட்டில்
இயேசுவின் சாயலிலே
என்றென்றும் வாழ்பவனே
கிறிஸ்துவின் உண்மை சீஷன்
2. உலகத்தின் உப்பாய் உடைபட்ட அப்பமாய்
உலகெங்கும் அலைந்து உண்மையாய் உழைத்து
அன்பினால் நிறைந்து புது பெலன் பெற்று
அன்பராம் இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின்
3. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி
இறுதி வரை விசுவாசத்தால் வளர்ந்து
பொறுமையின் போர்க்கொடி அனுதினம் அணிந்தே
பரிசுத்த இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின்