கொடுப்பாயா, உன் கைகளை
1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்
2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்
3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்