சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே
சரணங்கள்
1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
பல்லவி
வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்
2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம்
3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மை யினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதை பெணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே – வானம்
4. அதிக மதிக அன்பில் அமிழ்ந்தே அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்துமைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமய முன்னத பெலனீந்திடும் – வானம்