சந்தோஷமான பொன் நாள் – Santhosamana pon naal
சந்தோஷமான பொன் நாள்
இயேசு பாலகன் பிறந்த இந்நாள்
ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்
இதுதான் உண்மை கிறிஸ்மஸ்
ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டே
அவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார்
புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும்
எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ்
பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டே
பகிராமல் இருந்தால் சுயநலமே
ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும்
பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ்
ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி
பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம்
இருளில் இருப்பவர் இயேசுவை அறிய
உழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்