சபையோரே மகிழ்ந்து பாடுங்களேன் – Sabaiyorae Magilnthu Paadungalean
சபையோரே மகிழ்ந்து பாடுங்களேன் – Sabaiyorae Magilnthu Paadungalean
சபையோரே மகிழ்ந்து பாடுங்களேன்
சகல ஜனங்களே இயேசுவை தேடுங்களேன்
இயேசு ராஜாதி ராஜா
சீக்கிரமாய் வருகின்றார்
1. இதயக் கதவுகளே
இன்றே திறந்திடுங்கள்
மகிமையின் ராஜா
மகிமையாக உள்ளத்தில் வந்திடுவார்
2. தீபம் அணையாமல்
தினமும் காத்திடுங்கள்
எண்ணெய் குறையாமல்
விழிப்பாய் இருந்திடுங்கள்
3. சபையின் மேய்ப்பர்களே
மந்தையை காத்திடுங்கள்
கட்டிய வீடு நிலைத்திருந்தால்
கூலி பெறுவீர்கள்
4. வானங்கள் அகன்றிடுமே
பூமி மறைந்திடுமே
புதிய வானம் புதிய பூமி
சீக்கிரம் தோன்றிடுமே
5. பரிசுத்த அலங்காரம்
தரித்தே நின்றிடுங்கள்
மணவாளன் இயேசுவையே
சந்திக்க புறப்படுங்கள்
6. எக்காளம் தொனித்திடுமே
இயேசு வருகிறார்
இமைப்பொழுதில் எல்லோரும்
பரலோகம் சென்றிடுவோம்