சமாதானம் நல்கும் நாமம்
சமாதானம் நல்கும் நாமம்
இயேசு நாமமே – மன சாந்தி
தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே
சரணங்கள்
1. அன்னை தந்தை சொந்தம் யாவும்
இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம்
இயேசு நாமமே
2. பாவவினை போக்கும் நாமம்
இயேசு நாமமே
பரலோக வாழ்வில் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
3. பயங்கள் யாவும் போக்கும் நாமம்
இயேசு நாமமே
உயர் பக்தி தன்னை வளர்க்கும் நாமம்
இயேசு நாமமே
4. பொன் வெள்ளி புகழ் பொருளும்
இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏக நாமம்
இயேசு நாமமே