சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க
சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க – இது
சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
சரணங்கள்
1. ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க -இவர்
சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
2. யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க – உங்கள்
மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க
3. படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க – இந்த
பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க
நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க