சிலுவைக் காட்சி காண வாராய்
சிலுவைக் காட்சி காண வாராய்
சிந்தின ரத்தம் ஓடுவதை பாரா
சரணங்கள்
1. அண்ணல் இயேசு உன் அதிபதியாக
இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே
இன்னல் ஏதும் உன்னைச் சேராதே
இன்றே வா (2) – சிலுவை
2. பாவியென் றெண்ணி தியங்காதே
பரன் இயேசுவை தள்ளிவிடாதே
பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே
இன்றே வா (2) – சிலுவை
3. இன்று உன் ஜீவன் போனால்
உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய்
இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய்
இன்றே வா (2) – சிலுவை
4. உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு
உணர்ந்து அவரிடம் வந்து பேசு
உலக ரட்சகர் உன் இயேசு
இன்றே வா (2) – சிலுவை