சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics
Lyrics:
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2
முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்)
பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்)
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -2 – (சிலுவை மட்டும்)