சீயோனே ஆர்ப்பரி
பல்லவி
சீயோனே ஆர்ப்பரி
சிருஷ்டி கர்த்தரான உந்தன்
சர்வ வல்ல தேவனே
சரணங்கள்
1. சென்றதாம் பாதைகளிலே
சேதமே யாதுமணுகா
கண்மணி போலக் காவல் செய்தோனை
நன்றியுடன் பாடுவோம் – சீயோனே
2. நீக்கினார் பாவப்பாரமே
போக்கினார் சாபம் யாவுமே
தாழ்த்தியே நீசக் கோலமதாகி
தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே
3. ஆதரவற்ற நேரத்தில்
ஆறுதலில்லா வேளையில்
அன்பாலணைத்து ஆறுதலீந்த
அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே
4. நிந்தையில் சோதனையிலும்
வந்ததாலம் தொல்லைகளிலும்
மாண்டவரோடு எம்மையும் மாளா
ஆண்டவர் ஆதரித்தார் – சீயோனே