சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai

Deal Score0
Deal Score0

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai

வெண்பா

சென்றாண்டு மைந்தர்எமை சேமமாய் ஆதரித்து,
நன்றோ டரவணைத்த நாயகனே! குன்றாமல்
வந்த இந்த ஆண்டதிலும் மாகிருபை யாயிரங்கு
எந்தைசரு வேசுர னே!

பல்லவி

தீரனே! சருவே சுரனே! அருள்
செய்யிவ் வாண்டி லே நரர் மீதே.

அனுபல்லவி

தாரணி உறு தாபம், பிணி, நீக்கி,
தமியரை ஆண்டருள் நிமலா! கண்ணோக்கி,-தீரனே

சரணங்கள்

1.மாதிரள் மிகு நன்மை நீ தந்தாய்
வந்த வினைகள் துறந்தருள் சொரிந்தாய்,
வேதா! கடந்த ஆண்டில் வேண்டும் நலம் புரிந்தாய்,
விந்தையுடனிவ் வாண்டும் உந்தயை சொரிந்தாள்.-தீரனே

2.தேவனே உனக்கொவ்வாத பாவம்,
தினமும் அடியர் செய்யும் தீவினை யாவும்,
பாவி இழிஞர் மீது பரனே! உன் கோபம்
பற்றாமல் அன்பாய் அகற்றுவாய்ச் சாபம்.-தீரனே

3.நீசர்கள் புரி பாதகம் நீங்க
நிரந்தரம் சூழும் தீ நினைவு பின் வாங்க,
நாச மிகுக்கும் இந்த ஞால வேட்கை நீங்க,
நாயன் கிறிஸ்துவோடு நேயம் உற் றோங்க;-தீரனே

4.நாதனே உனின் கிருபைக்காய் மீண்டும்
நவிலும் எமக்கிரங்கி நல்கும் இவ்வாண்டும்
நிதி இழந்த நரர்க் குனதருள் வேண்டும்
நிமலனே ஆதரி, அமலனே! ஈண்டும்.-தீரனே

Sentraandu Mainthar Emai song lyrics in english

Sentraandu Mainthar Emai Semamaai Aatharithu
Nantrodu Aravanaitha Naayaganae Kuntramal
Vantha Intha Aandathilum Maa Kirubaiyaai Erangum
Enthai Saruveasuranae

Theeranae Saruvae Suranae Arul
Seiveev Evvaandilae Narar Meethae

Thaaranai Uruthaabam Pini Neekki
Thamiyarai Aandarul Nimalaa Kannokki

1.Maathirul Migu Nanmai Nee Thanthaai
Vantha Vinaigal Thurantharul Sorinthaai
Vedha Kadantha Aandil Veandum Nalam Purinthaai
Vinthaiyudan Evvaandum Unthaiyai Sorinthaal

2.Devanae Unakkovvatha Paavam
Thinamum Adiyar Seiyum Theevinai Yaavum
Paavi Elignar Meethu Paranae Un Kobam
Pattramal Anbaai Agattruvaai Saabam

3.Neesargal Puri Paathagam Neenga
Nirantharam Soolum Thee Ninaiuv Pin Vaanga
Naasa Migukkum Intha Gnala Veatkai Neenga
Naayan Kiristhuvodu Neayam Uttronga

4.Naathanae Unin Kairubaikaai Meendum
Navilum Emakkirangi Nalgum Evvaandum
Nithi Elantha Nararkku Unatharul Veandum
Nimalanae Aathari Amalanae Eendum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
christian Medias
Logo