செய்வதெல்லாம் வாய்க்கும் – Seivathellam Vaaykkum
செய்வதெல்லாம் வாய்க்கும் – Seivathellam Vaaykkum
பல்லவி
செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சரணம்
1.துன்மார்க்கன் சொல்லில் நடவாமல்
பெரும் பாவியின் வழியில் நில்லாமல்
பரிகாசர் இடம் தனில் இராமல்
என்றும் தேவனின் வழியில் நடப்பவன் எவனோ ஒ.ஒ.ஒ.ஒ.ஒ – அவன்
2. கனி தருகின்ற தரு போலாவான்
இலை உதிராதிருக்கும் மரம் ஆவான்
குறையே இல்லாத வழி செல்லுவான்
என்றும் தேவனின் வழியில் நடப்பவன் எவனோ ஒ.ஒ.ஒ.ஒ.ஒ – அவன்
3. வேதம் தனிலே பிரியம் வைத்து
அல்லும் பகலிலும் தியானம் செய்து வந்து
கர்த்தரில் பாக்கியவனாகி
என்றும் தேவனின் வழியில் நடப்பவன் எவனோ ஒ.ஒ.ஒ.ஒ.ஒ – அவன்