ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே
4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்
5. தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..