தரித்திருப்போம் ஜெபத்திலே – Tharithirupom Jebathilae
தரித்திருப்போம் ஜெபத்திலே – Tharithirupom Jebathilae
ஆண்டுகள் பல கழிந்தும் மாற்றம் இல்லையே
பரிதபிக்கும் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ ?
சத்தியத்தை அறிந்திடாமல் மாளுகின்றாரே
திறப்பில் நிற்க சுவரை அடைக்க மனிதரில்லையே !
அனுபல்லவி
தரித்திருப்போம் ஜெபத்திலே
முன்னேறிச் செல்வோம் செயல் வீரராய்
பறைசாற்றுவோம் நல் சுவிசேஷத்தை
விரிவாக்கிடுவோம் நம் எல்லையை
ஆமணக்கின் நிழலில் வாழும் யோனாக்களோ நாம்
பரிதபிக்கும் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ ?
யாரை நான் அனுப்பிடுவேன் என் காரியமாய் ?
யார்தான் போவார் அறிவிக்கவே சுவிசேஷத்தை – தரித்திருப்போம்
இமயம் முதல் குமரி வரை நம் ஜனங்களின்
அழைப்பின் குரல் கர்த்தர் குரல் கேட்கவில்லையோ ?
அறிவிக்காமல் அமர்ந்திருந்தால் பழி சுமருமே
எழும்பிடுவோம் பெலப்படுவோம் புறப்பட்டுச்செல்வோம் – தரித்திருப்போம்
எல்லையைப்பெரிதாக்கின யாபேசைப்போல
எழுந்து கட்டி ஜெயமடைந்த நெகேமியா போல
சன்பல்லாத் தொபியாக்களை வீழச்செய்வோமே
தேசத்தின் எல்லைகளை நாம் சுதந்தரிப்போமே – தரித்திருப்போம்
Rev. தியோடர் வில்லியாம்ஸ் அவர்களால் 1965ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மி௸னெரி இயக்கம் இந்திய அருட்பணி இயக்கம் (IEM). இனம், மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அருட்பணியாளர்களை அனுப்பி, இயேசுகிறிஸ்துவை ஒருமுறைகூட கேள்விப் பட்டிராத மக்கள் மத்தியில் சுவிசே௸த்தை அறிவித்து சபைகளை ஸ்தாபித்து வருகிறது இவ்வியக்கம். இதன் பொன்விழா ஆண்டிற்கான கருப்பொருள் “இடத்தை விசாலமாக்கு… விரிவாகட்டும், தடைசெய்யாதே – ஏசாயா 54:2”. இந்த கருப்பொருளின் அடிப்படையில் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது.
Indian Evangelical Mission (IEM) was established by Rev. Theodore Williams in 1965. The mission of the organization is to take the Gospel of Jesus Christ to the unevangelized areas, and to plant churches among unreached people.
The song was written based on the verse Isaiah 54:2 “Enlarge the site of your tent … do not hold back; lengthen your cords and strengthen your stakes.” which was the theme for IEM Golden Jubilee Convention in 2015.
This song is released with the intention to challenge Indian Christians to realize their responsibility for world evangelization and to recognize their partnership with other Christians in the world in fulfilling their task.